சனி, 28 நவம்பர், 2020

வெதுப்பகமும் ஒரு புடவை வியாபார நிலையம் யாழில் முடக்கம்

யாழ்ப்பாணம் மாநகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடுவதற்கு மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி அறிவுறுத்தியுள்ளார்.
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்று
 வந்த இடங்கள் சுகாதாரத் துறையினரால் இனங்காணப்பட்டு தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் தொடர்ச்சியான 
நடவடிக்கையாக யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்று மறு அறிவித்தல் வரை இன்று பிற்பகல் முதல் மூடப்பட்டது. அதன் முன்பக்க வாயிலைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வெதுப்பகத்தை
 இயக்கி உற்பத்திப் பொருள்களை மாற்று வழியூடாக விநியோகிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நவம்பர் 21ம் திகதி வெதுப்பக விற்பனையகத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் தனிப்படுதலுக்கு 
உள்படுத்தப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள புத்தக நிலையமும் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று வீடுகளுக்கு 
அவர் சென்று வந்த நிலையில் அங்குள்ள குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 7 நாள்களின் பின் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும். அதன் பெறுபேற்று 
அறிக்கை கிடைத்த பின் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ 
அதிகாரி தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>






வெள்ளி, 27 நவம்பர், 2020

புத்தளத்தில் 1067 கிலோ மஞ்சள் புத்தளத்தில் மீட்பு


கடற்படையால் புத்தளத்தில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 25-11-20.அன்று. 1067kg எடையுள்ள 
உலர்ந்த மஞ்சள் மற்றும், சந்தேகநபர் ஒருவரும் கைது
 செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம்-மன்னார் சாலையில் உள்ள 02 வது மைல் கல்லில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது,
 வடமேற்கு கடற்படை கட்டளை இந்த பகுதியில் உள்ள உப்பு உற்பத்தி நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த உலர்ந்த மஞ்சளை கண்டுபிடிக்க முடிந்தது. 1067 கிலோ 
எடையுள்ள மஞ்சள் 25 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக ரகுமான் நகரில் 04 வது மைல் போஸ்டில் இருந்து ஒரு சந்தேக நபரும் கடற்படையால் 
கைது செய்யப்பட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 24 நவம்பர், 2020

கம்பஹா வத்தளையில் ஆலய வீதி வீட்டுத் தொகுதி முடக்கம்

கம்பஹா – வத்தளை ஆலய வீதிப் பகுதியில் உள்ள தொழிலாளர் வீட்டுத் தொகுதி முடக்கப்பட்டுள்ளது.
அங்கு 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 20 நவம்பர், 2020

சட்டத்தரணிகளுக்கு எதிராக யாழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பின்பற்றப்படாத அநாகரிகமான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான நீதித்துறை சார்ந்த சட்டத்தரணிகளுக்கு 
எதிராக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அதனால் இந்த 
வழக்கை குப்பைத் தொட்டியில் மன்று போட வேண்டும் அல்லது வழக்குத் தொடுனர் அதனை மீளப்பெறவேண்டும்”
இவ்வாறு பொலிஸாரால் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட சட்டத்தரணிகளில் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயத்திக்கத்துக்குள் நாளை 21ம் திகதி தொடக்கம் 29ம் திகதிக்கு இடையே இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 106ம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் 
கீழ் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் நினைவேந்லை
 நடத்தவுதற்கு தடை கேட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், பொ.கஜேந்திரகுமார், எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், க.சுகாஷ், மாநகர சபை உறுப்பினர்கள் வரதாசா 
பார்த்திபன், மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட 37 பேருக்கு எதிராக தடைக் கட்டளை வழங்குமாறும் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதில் 4வது பிரதிவாதியான தன் சார்பில் முன்னிலையாகி முன்வைத்த ஆட்சேபனையின் போதே குறித்த சட்டத்தரணி மேற்கண்டவாறு மன்றுரைத்தார். மேலும்,
பொலிஸார் இந்த மனுவில் என்னையும் ஏனைய சட்டத்தரணிகளையும் குற்றச் செயலில் ஈடுபடவுள்ளனர் என்று குறிப்பிட்டு பிரதிவாதிகளாக இணைத்துள்ளனர். பொலிஸார் குறிப்பிட்டுள்ள 
நீதித்துறை சார்ந்த பலர் இன்றைய தினம்
 மேல் நீதிமன்றில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையாகியவர்கள். பொலிஸார் இப்படி நடந்துகொண்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டத்தரணிகள் எவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாவார்கள்.
நான் மூத்த சட்டத்தரணியாகவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு 
மேலாக ஜனாதிபதி சட்டத்தரணியாகவும் உள்ளேன். நான் குற்றச்செயலில் ஈடுபடுவேன் என்று பொலிஸாரால் இந்த
 மன்றுக்கு எவ்வாறு விண்ணப்பம் செய்ய
 முடியும். யாராவது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சிக் கூண்டில் ஏறி நான் குற்றம் செய்யப்போகின்றேன், சமாதானத்துடன் வாழும் மக்களிடம் குழப்பத்தை
 தூண்டிவிடப் போகின்றேன் என்று சாட்சியமளிக்க
 முடியுமா? அந்தத் திராணி யாருக்காவது இருக்கின்றதா? பொலிஸ் சீருடைய அணிந்து வந்து எங்களை முட்டாள்கள் 
ஆக்காதீர்கள்.
யாழ்ப்பாணம் கச்சேரியில் நடந்த கூட்டங்கள் பொலிஸாரின் கண்ணுக்குத் தெரியவில்லையா? நாம் கொரோனா நோய் பரவலுக்கு ஏதுவாக சட்ட திட்டங்களை மீறப்போகின்றோம் என்று 
பொலிஸார் விண்ணப்பம் செய்கின்றனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அண்மையில் அமைச்சர்கள் வருகை தந்து 
ஒரு மண்டபத்துக்குள் 250 பேருக்கு மேல் அமர்ந்திருக்க கூட்டங்கள் நடத்தப்பட்டன. 
அந்தக் கூட்டங்கள் பொலிஸாரின் கண்களுக்குத் தெரியவில்லை. அந்தக் கூட்டங்களுக்கு நானும் சென்றிருந்தேன். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிவிட்டேன் என்று என்னை இன்று வரை 
பொலிஸார் கைது செய்யவில்லை” என்றும் அந்த சட்டத்தரணி
 மன்றுரைத்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>



செவ்வாய், 17 நவம்பர், 2020

சஜித்தணி எம்பி மீன்களை வாங்க வலியுறுத்தி பச்சையாக கடித்தார்

நாட்டில் கொரோனா தொடர்பான அச்சம் இல்லாமல் மீன்களை மக்கள் வாங்க வேண்டுமென ஊடக சந்திப்பில் தெரிவித்த, 
சஜித்தணி எம்பியும் முன்னாள் மீன்பிடி இராஜாங்க அமைச்சருமான திலிப் வெதாராச்சி மீன் ஒன்றை பச்சையாக கடித்து காண்பித்தார்  
சஜித்தணி எம்பி

நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாட்டில் உத்தரவை மீறிய 95 பேர் ட்ரோன்களின் கண்காணிப்பால் கைது

கொட்டாஞ்சேனை, வாழைத்தோட்டம் ஜா-எல மற்றும் வத்தளை பகுதிகளில் தனிமை உத்தரவை மீறிய 95 பேர்.17-11-20. இன்று கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ட்ரோன்களின் விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 15 நவம்பர், 2020

யாழ் வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தி

 வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.இன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில்
 முடிவுகளின் படி
1,குகதாசன் விதுசாந் 194
2,வரதீஸ்வரன் அபிராமி 184
3ம்,கேதீஸ்வரன் துஷாரா 181
4.உமாகாந்தன் பிறேமகாந் 180
5,பகீரதன் டர்சிகா 180
6,செல்வகஜானன் பிரசாயினி 173
7,உதயரூபன் பிரவீனா 171
8,விஷ்வநாதன் அபிசேகா 168
9,புவனேந்திரன் கிஷானா 162
10,ஸ்ரீசங்கர் அபிஷா 162
அனைத்து மாணவர்களுக்கும் 7இந்த இணையத்தின் 
 வாழ்த்துக்கள்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>