புதன், 31 மார்ச், 2021

யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுவரித் திணைக்களத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், 
30-03-2021.அன்று மாலை முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் ஒரு கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது. அதன் 
பெறுமதி சுமார் ஒரு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 24 மார்ச், 2021

நாட்டில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியில்லை

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் 
24-03-2021.இன்று தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.
இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி நேற்று (23) கிடைத்திருப்பதாகவும்
 அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதிலும் அனைத்த பாடசாலைகளின் 
கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று நடைபெறும் என்று குறிப்பிட்ட அமைச்சரிடம் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியுண்டா? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் 
பதிலளித்தார்.
இதற்கு மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. தனியார் பாடசாலைகள் சர்வதேச பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் 
தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சித்திரை விடுமுறைக்கு பின்னர் மேல் மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட தர வகுப்பு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலைக்கான சித்திரை விடுமுறை தொடர்பில் குறிப்பிடுகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி விடுமுறை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 22 மார்ச், 2021

பெல்மடுல்லவில் 80 இலட்சம் ரூபா பணத்துடன் பெண் பொலிஸாரால் கைது

பெல்மடுல்ல பகுதியில் சுமார் 80 இலட்சம் பணத்தை கொண்டு சென்ற பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் அதிகளவு பணத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஓபநாயக்க பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பணம் எப்படி வந்தது, காரணம் என்ன என்பதை குறித்த பெண் வெளியிடவில்லை
 எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இவர் 80 இலட்சத்து 31ஆயிரம் பணத்துடன் பயணம் செய்ததாகவும், இந்த பணம் எவ்வாறு 
கிடைத்தது 
என்பதை அவர் கூறவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>







வியாழன், 18 மார்ச், 2021

நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு விலையை அதிகரிக்க தேவை இல்லை

நாட்டில்  சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என  சிறிலங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 
                                தெரிவித்துள்ளார்.                                       
அலரி மாளிகையில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பில் நேற்று (17)  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, மரக்கறி மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு 
தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 10 மார்ச், 2021

ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..யாழ் விவசாயிகளுக்கு

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது உருளைக்கிழங்கு அறுவடைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து, உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யுமாறு, பிரமர் மஹிந்த ராஜபக்ஷ லங்கா சதோச நிறுவனத்திற்கு பணிப்புரை 
விடுத்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாண உருளைக்கிழங்குகளுக்கு தென்னிலங்கை மக்களிடம் சிறந்த வரவேற்பு இருப்பதாகவும் ஏனைய உருளைக்கிழங்குகளைவிட, யாழ்ப்பாண உருளைக்கிழங்கின் வாசமும் சுவையும் அலாதியானது என்றும் அரசின் பிரதானி ஒருவர் 
குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>