ஞாயிறு, 24 ஜனவரி, 2021

தனது நட்பு நாடுகளின் ஆதரவை பெறும் முயற்சியை சிறிலங்கா ஆரம்பித்தது

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கான தனது பதிலை சிறிலங்கா  புதன்கிழமை சமர்ப்பிக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்த இலங்கை அரசாஙகத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கும் என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர் இதுவரை நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகள் குறித்தும் அரசாங்கம் பதிலளிக்கும் எனவும்
 தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிராக இன்னொரு தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்கு நட்புநாடுகளையும் ஒத்த நிலைப்பாடுகளை கொண்ட நாடுகளையும் கேட்டுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் ஆனால் நாங்கள் இது குறித்த இன்னமும் முடிவெடுக்கவில்லை புதிய தீர்மானம் கிடைப்பதற்காக காத்திருக்கின்றோம் என அவர் 
தெரிவிததுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பாடசாலைகளை மேல்மாகாணத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை.

மேல்மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை
  24,-01-2021.ஞாயிறுக்கிழமை ..இன்று
மேல்மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 15ம் திகதிக்கு முன்னர் முழுமையாக ஆரம்பமாகும் என கல்வியமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நிலவரம் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்டதாக காணப்படும் ஒவ்வொரு நகரத்திலும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த கருத்தினை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளையும் ஒரேநேரத்தில் ஆரம்பிக்க முடியாது என்பதால் படிப்படியாக பாடசாலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் உள்ள 1576 பாடசாலைகளில் 900 பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திட்டமுள்ளதாக அமைச்சர் 
தெரிவித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>>வியாழன், 21 ஜனவரி, 2021

கேர்ணல் சந்திம குமாரசிங்க புதிய பணிப்பாளராக பொறுப்பேற்பு

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் புதிய பணிப்பாளராக கேர்ணல் சந்திம குமாரசிங்க பாதுகாப்பு அமைச்சிலுள்ள தனது அலுவலகத்தில்19-01-21.அன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுவரை காலம் பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளராக பதவிகளை வகித்து வந்த பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்கவிடமிருந்தே கெமுனு ஹேவா படையைச் சேர்ந்த கேர்ணல் சந்திம குமாரசிங்க பொறுப்பேற்றுக் கொண்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 2 ஜனவரி, 2021

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வடக்கில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்!

வட மாகாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண 
தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“கடந்த வருடம் உலகத்தினை
 அச்சுறுத்தலுக்கு 
உள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் அச்சத்துடன் கடந்து 
சென்றுள்ளது. அதேபோல் எதிர்வரும் காலத்திலும் உலக
 நியதிக்கு இணங்க வடக்கு பகுதியிலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்குரிய 
கட்டுப்பாடுகள், நடைமுறைகளை
 பின்பற்றி பொது மக்களை செயற்படுத்துவதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.
அதேபோல வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தை விட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குரிய மேலதிகமான சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். பொதுமக்களை 
நல்வழிப்படுத்தி குற்றச் செயல்களை தடுத்து, வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது
 நோக்கமாக காணப்படுகின்றது.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் தற்போது இடம்பெறுகின்ற சில கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து 
அதனை கட்டுப்படுத்துவதற்குரிய
 வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த நடவடிக்கை மேலும் 
விரிவாக்கப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, பொது மக்கள் சுதந்திரமாக வாழ பொலிஸார் பூரண ஒத்துழைப்பினை
 வழங்குவார்கள்.
அதேபோல பொதுமக்களுக்கு ஒரு அழைப்பினை விடுக்க விரும்புகின்றேன். சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் ஏதாவது
 தகவல்கள் அறிந்திருந்தால் அதனை தெரியப்படுத்தினால், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும்” 
என குறிப்பிட்டார்.


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 1 ஜனவரி, 2021

நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் பரபரப்பைக் கிளப்பும் பிரபல ஜோதிடர்!!!

இலங்கைக்கு அடுத்த முறை புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவிததுள்ளார்.
அந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுவதாகவும் அவர் சிம்ம ராசி உடையவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியே 
உள்ள ஒருவராகும். அவரது பெயரை தற்போது வெளிப்படுத்த முடியாது. அவரது ஜாதகம் என்னிடம் உள்ளது.2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவில்லை 
என்றால் துப்பாக்கியில் சுட்டுக்கொள்வதாக
 நான் கூறினேன். எனினும் அது சோதிடத்தில் இருந்த விடயம் அல்ல.மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் வெற்றி பெற செய்வதற்கே அன்று நான் அவ்வாறு 
கூறினேன்.நான் சோதிடம் பார்ப்பதற்கு 
அரை மணி நேரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அறவிடுவேன். ஜாதகம் ஒன்று
 தயாரிப்பதற்கு 26500 ரூபாய் அறவிடுவேன்.இணையத்தள ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>