திங்கள், 27 பிப்ரவரி, 2023

வடக்கில் தென்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வெளியான அதிர்ச்சி செய்தி

 

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.இது 
தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் கோரிக்கை கடிதம் வடக்கு மாகாணத்திலிருந்து அனுப்பப்படவுள்ளது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாணத்திலிருந்து அதிகளவானோர் தெரிவு செய்யப்பட்டிருக்கவேண்டிய நிலையில், அப்போதைய ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீட்டால் குறைந்தளவானோரே தெரிவாகியிருந்தனர்.
இவர்களில் 100 பேர் வரையில் தற்போது வடக்கு மாகாணசபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், வடக்கு மாகாண சபையில் சிற்றூழியர், தகைசார் பணியாளர் உட்பட சுமார் ஆயிரத்து 200 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இந்த வெற்றிடங்களுக்கு, ஏனைய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்து ஆயிரத்து 100 பேரை நியமிக்குமாறு வடக்கு மாகாணசபையால் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றியுள்ள நிலையில், தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை இங்கு நியமிக்க முயற்சிக்கப்படுகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

இலங்கை மருதானையில் கண்ணீர்ப்புகை தாக்குதல்

மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகச் செய்தியாளர் 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 21 நவம்பர், 2022

நாட்டில் பேருந்து பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு தானியங்கி முறையை அறிமுகப்படுத்த முடிவு

பேருந்து பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன 
தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பயணிகள் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தும் வகையில் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்கப்படும் என்பதால் அவற்றின் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என்றும் பயணிகள்  உள்ளே வரும் இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய சாதனங்களில் தங்களது வங்கி அட்டைகளை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இடங்களை அறிய, பேருந்துகளில் ஜிபிஎஸ் அமைப்பை அணுகும் திறன் கொண்ட புதிய மின்னணு சாதனங்களை பொருத்தவும்
 திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பேருந்து உரிமையாளரின் அனுமதியுடன், சாரதிக்கு உதவியாக ஒரு உதவியாளரை பணியமர்த்த முடியும் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சாதனங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு, இலங்கை மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
புதிய கொடுப்பனவு முறைமை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 11 அக்டோபர், 2022

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் தாயொருவர் எனது மகன் எனக்கு வேண்டாம் என கடிதம் எழுதி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை
 என கூறி ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து 
விட்டு சென்றுள்ளார்.
அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன்அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில்
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
சனி, 24 செப்டம்பர், 2022

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

இலங்கையின்  பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் முறையான உணவு வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை உண்மையாகும்.எனினும் விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சில சம்பவங்களை மாத்திரம் கொண்டு அவற்றை திரிபுபடுத்தி வேறு வகையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எமது காலத்திலும் பாடசாலைகளில் காலைக்கூட்டம் இடம்பெறும் போது, மாணவர்கள் மயங்கி விழுவது வழமையானதொரு விடயமாகும். இது பாடசாலைக்கு சென்ற அனைவரும் அறிந்த பொதுவானதொரு
 விடயமாகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 30 ஜூன், 2022

இலங்கை மக்களின் துணிகர செயல் அந்தரத்தில் தொங்கும் ஆட்டோ

இலங்கை ராஜிகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் வாகன பாகங்களை திருடியவர்களை கையுமெய்யுமாகப் பிடித்த பிரதேச மக்கள், திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட முச்சக்கர வண்டியை மின்கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 
இடம்பெற்றுள்ளது.
மக்களின் வாகனப் பாகங்கள் மற்றும் எரிபொருளைத் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட குறித்த முச்சக்கர வண்டியே, மக்களால் பறிமுதல் செய்யப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது.
நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சுற்றி திருட்டு வழக்குகள் கணிசமாக 
அதிகரித்துள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 22 மே, 2022

யாழில் ஆசிரியரின் மோசமான செயலால் மாணவனுக்கு நேர்ந்த கதி

 யாழில் ஆசிரியர் அறைந்ததால் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு செயற்பட்டுள்ளார். மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>