சனி, 27 பிப்ரவரி, 2021

பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் பாதுகாப்பான முகக் கவசத்தை தயாரித்து அசத்தல்

உலகளாவிய ரீதியில் மிகவும் பாதுகாப்பான கோவிட் முகக் கவசம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பேராதனை பல்கலைகழக நிபுணர்களினால் கோவிட் வைரஸ் தொற்றை அழிக்கும் விசேட முகக் கவசம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை,26-02-2021 அன்று  இடம்பெற்றுள்ளது.இதுவரையில் உலகில் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களை விடவும் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இந்த முகக் கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த முகக் கவசம் 3 அடுக்குகளாலானது என இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட போராதனை
 பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் காமினி 
ராஜபக்ஷ ரெிவித்துள்ளார்.அந்த முகக் கவசத்தின் முதல் அடுக்கில் உமிழ்நீர் போன்ற திரவங்களை உடனடியாக நீக்குகிறது, அதே
 நேரத்தில் இரண்டாவது அடுக்கில் உள்ள ஒரு சிறப்பு இரசாயனம் உள்வரும்
 வைரஸை ஒருவிதத்தில் அழிக்கிறது மற்றும் மூன்றாவது அடுக்கு நீர்த்துளிகளை ஆவியாக்குகிறது என 
பேராசிரியர் வி
ளக்கியுள்ளார்.அத்துடன் இந்த முகக் கவசத்தை 25 முறை கழுவி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.தற்போது இலங்கையில் 
பயன்பாட்டில் உள்ள KN 95 முகக் கவசத்தை விடவும் இது மிகவும் பாதுகாப்பான குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முகக் கவசத்தினால் 99% வைரஸ்கள் அழிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் மற்றும் மருத்துவ பீடம் நடத்திய ஆய்விற்கமைய 
தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 18 பிப்ரவரி, 2021

தூதுவர்கள் வடக்கிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்

ஜநா அமர்விற்கு முன்னதாக தமிழ் மக்களின் மனதை நாடி பிடித்துப்பார்ப்பதில் சர்வதேச நாடுகள் மும்முரமாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக வடக்கிற்கு தூதர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர் தற்போது சுவிஸ் தூதர் வருகை தந்துள்ள நிலையில் அடுத்து அமெரிக்கா,கனடாவென படையெடுப்புக்கள்
 தொடரவுள்ளது.
இதனிடையே தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும். அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு என சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தினராம்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான சுவிஸ்சர்லாந்து தூதுவர் டொமினிக் பேர்கலர், நல்லை ஆதீனத்துக்கு 17-02-2021,அன்று  மாலை சென்றிருந்தார்.
நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இந்துக் குருமார் ஒன்றியத்தைச் சேர்ந்த கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர், கலாநிதி ஆறு.திருமுருகன் மற்றும் சிவதொண்டன் சுவாமிகள் ஆகியோர் சுவிஸ்சர்லாந்து தூதுவரைச் 
சந்தித்தனர்.
55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எமது உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கான உரிமைகளை வழங்கியுள்ள சுவிஸ்சர்லாந்துக்கு நன்றிகள் தெரிவிக்கின்றோம். அவர்கள் தமது மத வழிபாடுகளுக்கு ஆலயங்களை அமைக்க அனுமதித்துள்ளமையும் 
பாராட்டுக்குரியது.
அதேபோன்று இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் சகல உரிமைகளையும் கிடைக்க சுவிஸ்சர்லாந்து ஒத்துழைக்கவேண்டும் என்றும் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியதாக
 தெரிவித்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் ஒன்றுகூடிய: காரணம் என்ன

யாழில் ஒன்றிணைந்த அனைத்துக் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது
 தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்வில்லை என்பதுவும்
 குறிப்பிடதக்கது . 
  தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும், நில ஆக்கிரமிப்புக்கள், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை தடுப்பதற்கு எதிர்காலத்தில் தமிழ் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறித்த ; கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக அறிய 
முடிகின்றது.
 
நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 11 பிப்ரவரி, 2021

நாட்டில் சதொச களஞ்சியசாலைகளை சோதனையிட நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் நிலை காரணமாக நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் 27 அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்பட்டதோடு குறித்த சதொச களஞ்சியசாலைகளை சோதனையிடும் நடவடிக்கை
  அமைச்சர் பந்துல குணவர்தனவினால் 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெலிசர, பூஸ்ஸ, குருணாகல், வெயாங்கொடை மற்றும்
 இரத்மலானை உட்பட அநேக பகுதிகளில்
 அமைந்துள்ள சதொச களஞ்சியசாலைகள் இவ்வாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால்10-02-2021. அன்றய  தினம் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
தரமான தயாரிப்புகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் பந்துல குணவர்தன இவ்விஜயத்தின்போது தொிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 4 பிப்ரவரி, 2021

நமது வரலாற்றில் பெரும் தாக்ம் கொழும்பு-ஜெனீவா பலப்பரீட்சை?

தனிமனித வாழ்விலும் நாடுகளின் வரலாறுகளிலும் சில தீர்மானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைவதுண்டு. அதேபோன்று சில நாடுகள் வரலாற்றில் மறக்க முடியாத சில சம்பவங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுவதும்
 இயல்பானதே.
அந்த வகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் விஜயன் வருகை முதல் இன்றுவரை சில சம்பவங்கள் நமது வரலாற்றில் பெரும் தாக்கங்களைச் செலுத்தி வந்திருக்கின்றன. அந்தவகையில் சுதந்திரத்துக்குப் பின் நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் 1971ல் ஒடுக்கப்பட்ட சிங்கள
 இளைஞர்கள் நடத்திய அரசுக்கு எதிரான
 ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிவுற்றாலும் அந்த கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இந்த 
நட்டில் ஜேவிபி என்ற பெயரில் இன்றும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் 1988-1989களில் மீண்டும் அரசுக்கு 
எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு அதுவும் தோல்வியில் முடிந்ததுடன், 1971 மற்றும் 1988-1989களில் தமது பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை இழந்தனர். இதில் போராட்டக்காரர்கள் தமது 
தலைவன் ரோஹன விஜேவீர மற்றும் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரையும் இழக்க வேண்டி வந்தது. ஆனால் பிற்காலத்தில் தலைவராக வந்த சோமவங்ச அமரசிங்ஹ மட்டும்
 தப்பித்துக் கொண்டார்.
அவர் தான் எப்படி தப்பித்துக் கொண்டேன் என்ற கதையை இந்தக் கட்டுரையாளனுடனான சந்திப்பொன்றில் முதல் முறையாக சொல்லி இருந்தார். நாம் பல வருடங்களுக்கு முன்னர் அந்தக் கதையையும் எமது வார இதழில் சொல்லி இருந்தோம். அடுத்து
 சுதந்திரத்துக்குப் பின்னாலான அரசியலில் ஈழத் தமிழர் நடத்திய அரசியல் உரிமைக்கான சாத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போக தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள். இது இன்று இலங்கை அரசியலில் மிகப் பெரிய வரலாற்றுப் பதிவுகளையும் காயங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆயுதப் போராட்டங்கள் நடத்திய பல குழுக்கள் களத்தில் இருந்தாலும் அவை பல்வேறு காரணங்களினால் சம பலத்தைக் கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில் இவற்றில் பல குழுக்கள் இந்திய, இலங்கை அரசுகளின் கையாள்களாக மாறி அதற்கு நியாயம் 
சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கடைசி நிமிடம் வரை களத்தில் நின்றவர்கள் என்றவகையில் விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபகாரன் மீதும் உலக வாழ் தமிழ் மக்கள் இன்றும் அபிமானத்தை வைத்திருக்கின்றார்கள்.
தனது நாட்டுக்குச் சொந்தமான ஒரு பெரும் நிலப் பரப்பை பிரபாகரன் ஆட்சி செய்துவருவதால்-கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அதனை மீட்டெடுத்தவர்கள் என்ற வகையில்  தெற்கில் ராஜபக்ஸாக்கள் ஹீரோக்களாக மதிக்கப்படுகின்ற ஒரு நிலையும் இருந்து வருகின்றது. தெற்கில் ராஜபக்ஸாக்கள் தம்மை செல்வாக்கானவர்களாக வைத்திருக்க கடும்போக்கு இனவாதிகளை உற்சாகப்படுத்தும் ஒரு இராஜதந்திரத்தையும் தற்போது செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு கட்டத்தில் தாம் தேர்தலில் தோற்றுப் போனால் சர்வதேசம் எம்மை மின்சாரக் கதிரையில் ஏற்றிவிடும் என்றும் கூட கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனால் 2015 தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோற்றுப் போன போதும் அப்படியான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை
. நல்லாட்சிக் காலத்தில் சர்வதேசம் போர் குற்றம் என்பதனைக் கண்டு கொள்ளவில்லை. அத்துடன் புதிய மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசுக்கு அவை காலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
நல்லாட்சி நடந்து கொண்டிருந்த ஓரிரு வருடங்களுக்குள்ளேயே ராஜபக்ஸாக்கள் மீண்டும் அரசியல் ரீதியில் எழுச்சி பெற்றுத்  தம்மைப் பலப்படுத்திக் கொண்டதுடன் அடுத்து வந்த தேர்தலில் கடும் போக்கு பௌத்த அமைப்புக்களின் மிகப் பெரும் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>