வெள்ளி, 26 நவம்பர், 2021

இலங்கைக் காவல் துறையை தாக்கிய ஆறு பேர் சிக்கினர்

சிறிலங்கா  காவல் துறை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ராஜகிரிய பிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தர்மபுரம் காவல் துறை உத்தியோகத்தர்கள் குழுவை சந்தேகநபர்கள்
 தாக்கியுள்ளனர்.
இதில் காவல் துறை  அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய காவல் துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாககாவல் துறையினர் 
தெரிவித்தனர்.
இதற்கமைவாக, ராஜகிரியவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (26) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

சனி, 13 நவம்பர், 2021

நாட்டில் பண்டையகாலத் தொல் பொருட்களை வைத்திருந்தவர் கைது

நாட்டில் பண்டையகால தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தம்வசம் வைத்திருந்த இளைஞனை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய 12-11-2021. வெள்ளிக்கிழமை அன்று மாலை அக்கரைப்பற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பகீரதன் தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாண்டியடிப் பகுதியை சேர்ந்தவர் எனவும் 19 வயது மதிக்கத்தக்க இச்சந்தேக நபரிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் அடங்கிய பொருட்கள் பல 
மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>