வெள்ளி, 18 டிசம்பர், 2020

கிண்ணியாவில் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடூழியச் சிறைத் தண்டனை

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த 
வழக்கின் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், கல்முனை கடற்கரையில் தலைமறைவாகியிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, அதனை
 செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 07 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.மேலும், குற்றவாளிக்கு 75,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 18 மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்துள்ளார்.கிண்ணியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி 13 வயதான சிறுமி 50 வயது 
நபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது பிரதிவாதி தலைமறைவாகினார்.எனினும், பிரதிவாதியின்றி வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.துஷ்பிரயோகத்திற்கு 
உட்படுத்தப்பட்ட 13 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ளதுடன், மேற்கொள்ப்பட்ட மரபணு பரிசோதனையில் பிரதிவாதியே குழந்தையின் தந்தை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக 
அரச இரசாயன பகுப்பாய்வாளர் மன்றில் சாட்சியமளித்துள்ளார்.இதன் அடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதியை
 குற்றவாளி என அறிவித்து நீதிபதி 
மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.பொலிஸ் மா அதிபரின் நேரடி பணிப்புரையில், உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கல்முனையில் தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 13 டிசம்பர், 2020

கொழும்பில் பல பகுதிகள் முடக்கம் சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு, கிரான்பாஸ் சிறிசந்த செவன வீடமைப்பு பகுதி, கிரான்பாஸ் சிறிமுது உயன, மாளிகாவத்தை லஹிரு செவன வீடமைப்பு பகுதி, பொரளை சிறிசர உயன ஆகிய பகுதிகளில்.14-12-20. நாளை அதிகாலை முதல் முடக்கநிலை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பின் ஏனைய 17 பகுதிகளில் முடக்கம் தொடர்வதுடன், வெள்ளவத்தை மயூரா ப்ளேஸ் பகுதி.14-12-20. நாளை அதிகாலை முதல் முடக்கப்படவுள்ளது.
கம்பஹா – வத்தளை பொலிஸ் பகுதியில், ‘கெரவலப்பிட்டி, ஹெக்கித்த, குருந்துஹேன, எவெரிவத்தை, வெலிகந்தமுல்லை, பேலியகொடை பொலிஸ் பகுதியில் பாத்திய’ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நாளை (14) முடக்கநிலை தளர்த்தப்படவுள்ளது.
அதேவேளை, கம்பஹாவின் ஏனைய 7 பகுதிகளில் முடக்கம் தொடர்வதுடன், ‘வத்தளை பொலிஸ் பகுதியில் நைனாமடு, டூவே வத்த, பேலியகொட பொலிஸ் பகுதியில் ரோஹன விஹார மாவத்தை, 
கிரிபத்கொட பொலிஸ் பகுதியில் வெடிகந்தை, நிட்டம்புவ பொலிஸ் பகுதியில் திஹரிய வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் வரன ஆலய வீதி, கொத்தொட வீதி, ஹிரிந்த மாவத்த ஆகிய பகுதிகள் நாளை முதல் முடக்கப்படவுள்ளது.
களுத்துறை – வெகனகல் கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள், மரிக்கார் தெரு ஆகிய பகுதிகளும் நாளை முதல்
 முடக்கப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இபலோகம விஜிதபுர கோட்டை மதிலுக்கு சேதம் 10 பேர் கைது

அநுராதபுரம் – இபலோகம விஜிதபுற கோட்டை இருந்ததாக கருதப்படும் தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.
பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மதில் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சிலர் நடவடிக்கை எடுத்தமையினால், அங்கிருந்த தொல்பொருள் பகுதிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இபலோகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அழகப்பெருமாகமயில் உள்ள பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக இந்த மதில் கட்டப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொல்பொருள் தொகுதிக்கு 
சேதம் விளைவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களுள் பள்ளிவாசலின் தலைவரும் அடங்குவதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 3 டிசம்பர், 2020

தற்போதுவரை யாழில் எட்டாயிரம் குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதுவரை 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.03-12-20.
இன்று பிற்பகல் யாழ்.மாவட்ட செயலகத்தில் தொண்டு நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
குறித்த சந்திப்பில் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் சூம் தொழில்நுட்பம் மூலம் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.
கலந்துரையாடலின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகேசன் இவ்வாறு தெரிவித்துளார்.
மேலும்,
யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1,025 குடும்பங்களை சேர்ந்த 3,058 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 39 வீடுகள் முழுமையாகவும், 1913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் மகேசன் 
தெரிவித்துள்ளார்.
யாழ்  தொண்டைமனாறு தடுப்பு அணையின் 8 கதவுகள் திறக்கப்பட்ட போதும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் நீர்வடிந்து ஓடுவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 1 டிசம்பர், 2020

இலங்கை போர்குற்றம் தொடர்பான பிரித்தானிய கூலிப்படையின் விசாரணை ஆரம்பம்

பிரித்தானியாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சேவை நிறுவனம் 1980ம் ஆண்டு கூலிப்படையாக வந்து இலங்கையில் புரிந்த போர் குற்ற குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய மெட்ரோபோலிரன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கீனி மீனி சேவையின் படைகள் 1980ம் ஆண்டு தமிழ் இயக்கங்களுக்கு எதிராக போரிட இலங்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு இராணுவ பயிற்சியளித்தது.
அக்காலப்பகுதியில் அதிரடிப்படையினர் தமிழர்கள் பலரை படுகொலை செய்தனர்.
இந்நிலையிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கூலிப்படைகள் அல்லது தனியார் இராணுவ படைகளுக்கு எதிராக விசாரணைகளை பிரித்தானியா முன்னெடுப்பது இதுவே முதல்
 முறையாகும்.
கீனி மீனி கூலிப்படைகளின் இலங்கை தொடர்பான ஈடுபாட்டை பற்றிய ஆதாரங்கள் பிரித்தானிய அரச ஆவணங்கள் மற்றும் ஊடகவியலாளர் பிலிப் மில்லர் சமர்ப்பித்த கோரிக்கை ஆவணங்களில் இருந்தும் 
பெறப்பட்டுள்ளது.
கீனி மீனி என்ற பெயரில் போர் குற்றங்களுடன் தப்பித்த பிரித்தானிய கூலிப்படைகள் தொடர்பான நூலை ஊடகவியாளர் மில்லர் ஜனவரியில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அரசு திட்டமிட்டு வடக்கு வைத்தியசாலைகளை புறக்கணிக்கிறது. வினோ


அரசியல் காரணங்களுக்காகவும், மாகாண சபைக்கு கீழான நிர்வாகத்தில் இருப்பதாலும் வடக்கு வைத்தியசாலைகள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பி வினோ நோகராதலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றில்.01-12-20. இன்று  இதனை 
தெரிவித்தார். மேலும்,
“வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்திய அரசினால் 350 மில்லியன் ரூபாவில் நிர்மாணிக்கப்படும் விபத்து 
சிகிச்சை பிரிவிற்கான அதி நவீன கட்டிடப் பணி இன்னும் முற்றுப்பெறவில்லை.
33 மாடிகளைக் கொண்ட அச்சிகிச்சைப் பிரிவின் கீழ்தளம் மட்டும் முடிவுற்ற நிலையில் அவசர அவசரமாக கடந்த
 வருடம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அவசர சிகிச்சைப் பிரிவிற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட மீதி நிதிக்கான வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மாகாண சபைக்கு
 கீழான நிர்வாகத்தில் இருப்பதனாலும் அரசியல் காரணங்களுக்காகவும் திட்டமிட்டே இந்நிதி விடுவிக்கப்படாமல் இருப்பதாகவே 
நாம் கருதுகின்றோம்.
இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சு அதிகாரிகள் பொறுப்பற்ற பதில்களை சொல்லிக்கொண்டிருப்பதாக மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர். மேல் தள வேலைகள் முடிவுறுத்தப்படாதமையினால் கீழ்தளத்துக்கு நீர் கசிவு கூட ஏற்பட்டு 
நோயாளிகளை சீராக பராமரிக்கவோ, சிகிச்சையளிக்கவோ முடியாதுள்ளது. எனவே 350 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டுக்கான மிகுதி நிதியை சுகாதார அமைச்சர் உடனடியாக விடுவித்து இரண்டாம் கட்ட கடுமான ப்பணிகளை நிறைவ செய்து தர வேண்டும்.
அது மட்டுமன்றி வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையும் சட்ட வைத்திய அதிகாரி அறையும் மிகவும் பாழடைந்த நிலையிலேயே உள்ளன. இவற்றை நவீனப்படுத்த மத்திய 
அரசிடம் நிதிக்கான கோரிக்கைகள் தொடர்ந்தும் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது கவனத்தில் எடுக்கப்படவில்லை.
 இதற்கு தேவையான அண்ணளவு 
மதிப்பீடான 120 மில்லியன் ரூபா நிதியினை வழங்க சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாகாண பொது சுகாதார ஆய்வு கூடத்துக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தித் திட்டத்துக்கான நிதியையும் விடுவித்துக்கொடுக்க வழியேற்படுத்த வேண்டும். வவுனியாவிலுள்ள
 பிரதேச வைத்தியசாலைகளான 
பூவரசங்குளம், நெடுங்கேணி, செட்டிகுளம் வைத்தியசாலைகளில் உட்கட்டுமான அபிவிருத்திகளையும் அடுத்த 
ஆண்டில் செய்து கொடுக்க நிதி ஒத்துக்குமாறும் சுகாதார அமைச்சரைக் கோருகின்றேன். வடக்கு மாகாண நிர்வாகத்துக்குரிய வைத்தியசாலைகள் என்பதனால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட வேண்டாம் எனவும் கோருகின்றேன்.
இதேவேளை சுகாதாரத்துறையில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக முல்லைத்தீவு உள்ளது. மாவட்ட வைத்தியசாலையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் கூட இங்குள்ள
 மாவட்ட வைத்தியசாலைக்கு கிடையாது. அதி தீவிர சிகிச்சைப்பிரிவு இல்லாத ஒரு மாவட்ட வைத்தியசாலையாகவே
 இது உள்ளது.
பொது மருத்துவ சிகிச்சைப்பிரிவில் குறைந்த பட்சம் 6 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில் 3 பேர் மட்டுமே நிரந்தர சேவையில் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 60 வைத்திய அதிகாரிகளில் 32 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்கான 
மருத்துவ ஆளணி 129 ஆக இருக்கின்ற நிலையில் 71 பேர் மட்டுமே சேவையில் உள்ளனர். வைத்திய நிபுணர்களுக்கான 
அங்கீகரிக்கப்பட்ட ஆளணி 18 ஆக இருக்கின்றபோதும் 8 வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இரண்டு பொது மருத்துவ நிபுணர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே
 இருக்கின்றார்.
குழந்தை வைத்திய நிபுணர்கள் இருவர் இருக்க வேண்டிய இடத்தில் எவருமே இல்லாதுள்ளனர். மகப்பேற்று நிபுணர், சத்திரசிகிச்சை நிபுணர், கதிரியக்க நிபுணர்கள் இல்லை. போதிய அம்புலன்ஸ்களும் இல்லை. இதே நிலைதான் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலும் உள்ளது.
2013ம் ஆண்டின் பின்னர் ஆளணி மீளாய்வு
 செய்யப்படவில்லை. வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஆளணி மீளாய்வு செய்து அனுப்பிய போதும் சுகாதார
 அமைச்சு கவனம் எடுக்கவில்லை. அரசியலில் ஈடுபட்ட வைத்தியர்கள் பலர் இன்று அரசியலிலும் இல்லை வைத்தியத்துறையிலும் இல்லை .இவ்வாறானவர்களை மீளவும் வைத்திய சேவையில் இணைப்பதன் மூலம் வெற்றிடங்களை நிரப்ப முடியும்” – என்றார்¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>