வியாழன், 4 பிப்ரவரி, 2021

நமது வரலாற்றில் பெரும் தாக்ம் கொழும்பு-ஜெனீவா பலப்பரீட்சை?

தனிமனித வாழ்விலும் நாடுகளின் வரலாறுகளிலும் சில தீர்மானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைவதுண்டு. அதேபோன்று சில நாடுகள் வரலாற்றில் மறக்க முடியாத சில சம்பவங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுவதும்
 இயல்பானதே.
அந்த வகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் விஜயன் வருகை முதல் இன்றுவரை சில சம்பவங்கள் நமது வரலாற்றில் பெரும் தாக்கங்களைச் செலுத்தி வந்திருக்கின்றன. அந்தவகையில் சுதந்திரத்துக்குப் பின் நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் 1971ல் ஒடுக்கப்பட்ட சிங்கள
 இளைஞர்கள் நடத்திய அரசுக்கு எதிரான
 ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிவுற்றாலும் அந்த கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இந்த 
நட்டில் ஜேவிபி என்ற பெயரில் இன்றும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் 1988-1989களில் மீண்டும் அரசுக்கு 
எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு அதுவும் தோல்வியில் முடிந்ததுடன், 1971 மற்றும் 1988-1989களில் தமது பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை இழந்தனர். இதில் போராட்டக்காரர்கள் தமது 
தலைவன் ரோஹன விஜேவீர மற்றும் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரையும் இழக்க வேண்டி வந்தது. ஆனால் பிற்காலத்தில் தலைவராக வந்த சோமவங்ச அமரசிங்ஹ மட்டும்
 தப்பித்துக் கொண்டார்.
அவர் தான் எப்படி தப்பித்துக் கொண்டேன் என்ற கதையை இந்தக் கட்டுரையாளனுடனான சந்திப்பொன்றில் முதல் முறையாக சொல்லி இருந்தார். நாம் பல வருடங்களுக்கு முன்னர் அந்தக் கதையையும் எமது வார இதழில் சொல்லி இருந்தோம். அடுத்து
 சுதந்திரத்துக்குப் பின்னாலான அரசியலில் ஈழத் தமிழர் நடத்திய அரசியல் உரிமைக்கான சாத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போக தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள். இது இன்று இலங்கை அரசியலில் மிகப் பெரிய வரலாற்றுப் பதிவுகளையும் காயங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆயுதப் போராட்டங்கள் நடத்திய பல குழுக்கள் களத்தில் இருந்தாலும் அவை பல்வேறு காரணங்களினால் சம பலத்தைக் கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில் இவற்றில் பல குழுக்கள் இந்திய, இலங்கை அரசுகளின் கையாள்களாக மாறி அதற்கு நியாயம் 
சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கடைசி நிமிடம் வரை களத்தில் நின்றவர்கள் என்றவகையில் விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபகாரன் மீதும் உலக வாழ் தமிழ் மக்கள் இன்றும் அபிமானத்தை வைத்திருக்கின்றார்கள்.
தனது நாட்டுக்குச் சொந்தமான ஒரு பெரும் நிலப் பரப்பை பிரபாகரன் ஆட்சி செய்துவருவதால்-கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அதனை மீட்டெடுத்தவர்கள் என்ற வகையில்  தெற்கில் ராஜபக்ஸாக்கள் ஹீரோக்களாக மதிக்கப்படுகின்ற ஒரு நிலையும் இருந்து வருகின்றது. தெற்கில் ராஜபக்ஸாக்கள் தம்மை செல்வாக்கானவர்களாக வைத்திருக்க கடும்போக்கு இனவாதிகளை உற்சாகப்படுத்தும் ஒரு இராஜதந்திரத்தையும் தற்போது செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு கட்டத்தில் தாம் தேர்தலில் தோற்றுப் போனால் சர்வதேசம் எம்மை மின்சாரக் கதிரையில் ஏற்றிவிடும் என்றும் கூட கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனால் 2015 தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோற்றுப் போன போதும் அப்படியான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை
. நல்லாட்சிக் காலத்தில் சர்வதேசம் போர் குற்றம் என்பதனைக் கண்டு கொள்ளவில்லை. அத்துடன் புதிய மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசுக்கு அவை காலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
நல்லாட்சி நடந்து கொண்டிருந்த ஓரிரு வருடங்களுக்குள்ளேயே ராஜபக்ஸாக்கள் மீண்டும் அரசியல் ரீதியில் எழுச்சி பெற்றுத்  தம்மைப் பலப்படுத்திக் கொண்டதுடன் அடுத்து வந்த தேர்தலில் கடும் போக்கு பௌத்த அமைப்புக்களின் மிகப் பெரும் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக