சனி, 27 பிப்ரவரி, 2021

பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் பாதுகாப்பான முகக் கவசத்தை தயாரித்து அசத்தல்

உலகளாவிய ரீதியில் மிகவும் பாதுகாப்பான கோவிட் முகக் கவசம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பேராதனை பல்கலைகழக நிபுணர்களினால் கோவிட் வைரஸ் தொற்றை அழிக்கும் விசேட முகக் கவசம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை,26-02-2021 அன்று  இடம்பெற்றுள்ளது.இதுவரையில் உலகில் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களை விடவும் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இந்த முகக் கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த முகக் கவசம் 3 அடுக்குகளாலானது என இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட போராதனை
 பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் காமினி 
ராஜபக்ஷ ரெிவித்துள்ளார்.அந்த முகக் கவசத்தின் முதல் அடுக்கில் உமிழ்நீர் போன்ற திரவங்களை உடனடியாக நீக்குகிறது, அதே
 நேரத்தில் இரண்டாவது அடுக்கில் உள்ள ஒரு சிறப்பு இரசாயனம் உள்வரும்
 வைரஸை ஒருவிதத்தில் அழிக்கிறது மற்றும் மூன்றாவது அடுக்கு நீர்த்துளிகளை ஆவியாக்குகிறது என 
பேராசிரியர் வி
ளக்கியுள்ளார்.அத்துடன் இந்த முகக் கவசத்தை 25 முறை கழுவி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.தற்போது இலங்கையில் 
பயன்பாட்டில் உள்ள KN 95 முகக் கவசத்தை விடவும் இது மிகவும் பாதுகாப்பான குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முகக் கவசத்தினால் 99% வைரஸ்கள் அழிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் மற்றும் மருத்துவ பீடம் நடத்திய ஆய்விற்கமைய 
தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக