சனி, 2 ஜனவரி, 2021

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த வடக்கில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்!

வட மாகாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண 
தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“கடந்த வருடம் உலகத்தினை
 அச்சுறுத்தலுக்கு 
உள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் அச்சத்துடன் கடந்து 
சென்றுள்ளது. அதேபோல் எதிர்வரும் காலத்திலும் உலக
 நியதிக்கு இணங்க வடக்கு பகுதியிலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்குரிய 
கட்டுப்பாடுகள், நடைமுறைகளை
 பின்பற்றி பொது மக்களை செயற்படுத்துவதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.
அதேபோல வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தை விட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குரிய மேலதிகமான சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். பொதுமக்களை 
நல்வழிப்படுத்தி குற்றச் செயல்களை தடுத்து, வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது
 நோக்கமாக காணப்படுகின்றது.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் தற்போது இடம்பெறுகின்ற சில கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து 
அதனை கட்டுப்படுத்துவதற்குரிய
 வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த நடவடிக்கை மேலும் 
விரிவாக்கப்பட்டு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, பொது மக்கள் சுதந்திரமாக வாழ பொலிஸார் பூரண ஒத்துழைப்பினை
 வழங்குவார்கள்.
அதேபோல பொதுமக்களுக்கு ஒரு அழைப்பினை விடுக்க விரும்புகின்றேன். சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் ஏதாவது
 தகவல்கள் அறிந்திருந்தால் அதனை தெரியப்படுத்தினால், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும்” 
என குறிப்பிட்டார்.


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக