வெள்ளி, 26 நவம்பர், 2021

இலங்கைக் காவல் துறையை தாக்கிய ஆறு பேர் சிக்கினர்

சிறிலங்கா  காவல் துறை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ராஜகிரிய பிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தர்மபுரம் காவல் துறை உத்தியோகத்தர்கள் குழுவை சந்தேகநபர்கள் தாக்கியுள்ளனர்.இதில் காவல் துறை  அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,...

சனி, 13 நவம்பர், 2021

நாட்டில் பண்டையகாலத் தொல் பொருட்களை வைத்திருந்தவர் கைது

நாட்டில் பண்டையகால தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தம்வசம் வைத்திருந்த இளைஞனை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய 12-11-2021. வெள்ளிக்கிழமை அன்று மாலை அக்கரைப்பற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பகீரதன் தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாண்டியடிப் பகுதியை சேர்ந்தவர் எனவும் 19 வயது மதிக்கத்தக்க...

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

நாட்டில் பொருட்களின் விலை தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு.

பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல, அந்த விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்காது. இது எமது நாட்டில் மட்டுமல்ல உலக சந்தையிலும் இதே நிலைதான் உள்ளது. சீனிக்கான வரியை அரசாங்கம் குறைத்துள்ளது. பால்மாவுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது....

புதன், 25 ஆகஸ்ட், 2021

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை 50 வீதத்தினால் உயர்வு

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்க்ணடவாறு குறிப்பிட்டார்.நாட்டில் உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் ரில்லியன் கணக்கான நாணயத்தை அச்சிட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதுஎன அவர் குறிப்பிட்டுள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

செவ்வாய், 8 ஜூன், 2021

நாட்டில் மாணவர்களுக்காக இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய மென்பொருள்

நாட்டில் மாணவர்களுக்காக இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய மென்பொருள்புதன் ஜூன் 09, 2021பாடசாலை மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலவசமாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள் ஒன்றை எதிர்வரும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.இந்த புதிய மென்பொருளானது, நிகழ்நிலை (Zoom) மென்பொருளைப் போன்றது என்றும், இலங்கையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்...

செவ்வாய், 25 மே, 2021

சிறிலங்கா இராணுவத்தின் பெண்கள் படையணி யாழில்

  யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இராணுவத்தின் பெண்கள் படையணி களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இலங்கையில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமான பயணத் தடை அமுல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில்,25-05-2021 இன்றைய தினம் மக்கள் பொருட் கொள்வனவு செய்வதற்காக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் யாழ். நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும் இராணுவத்தின்...

சனி, 1 மே, 2021

நாட்டில் முழு ஊரடங்கு செய்தி - குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை

நாட்டில் முழு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என வெளியான செய்தி தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.“நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படு​ம் என்பது போலியான செய்தியாகும் அந்த போலியான செய்தி, யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பரவியிருந்தது” என காவல் துறை  பேச்சாளர் பிரதி காவல் துறை   மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.அந்தப் போலியான செய்தியில், முழு ஊரடங்கு சட்டம், ஏப்ரல்...

புதுக்குடியிருப்பில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு காவல் துறையால்.01-05-2021. இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்தும் வங்கி வைப்புக்களில் இருந்து சுமார் 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இவர்களால் சுமார் 150 பவுன் வரையான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய...

வியாழன், 29 ஏப்ரல், 2021

நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மே 9 வரை பூட்டு

நாட்டில் எட்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளும் தற்போதைய கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நேரடிக் கற்றல் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன என கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்கா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நேரடிக் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில் தற்போதைய கொவிட் பரவலைக் கருத்தில்...

திங்கள், 26 ஏப்ரல், 2021

யாழ் உரும்பிராய் விபத்தில் 15 சிறிலங்கா இராணுவத்தினர் காயம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில்.26-04-2021. இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில்  சிறிலங்கா  இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்  கைதடி - மானிப்பாய் வீதி ஊடாக ; மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் யாழ்ப்பாணம் - பலாலி வீதி வழியாக  இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர்  ரக வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.  குறித்த விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின்...

சனி, 24 ஏப்ரல், 2021

புன்னாலைக்கட்டுவனி கொள்ளைக் கும்பலின் பிரதான சூத்திரதாரி அதிரடியாகக் கைது.

யாழில் நள்ளிரவு வேளையில் வயோதிபர் வசிக்கும் வீடுகளில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரிடமிருந்து 18 தங்கப்பவுண் நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர் ஒருவரின்...

சனி, 17 ஏப்ரல், 2021

கோப் குழு அதிருப்தி சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் குறித்து

நாட்டில் சுகாதார அமைச்சினால், 2006 ஆம் ஆண்டு 31.71 மில்லியன் ரூபா செலவில், கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் 224 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும், 15 வருடங்களுக்கு மேலாக அவை செயலற்ற நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவான கோப் குழுவில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், கோபா குழு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், சுகாதாரத்துறை...

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வடமராட்சியில் அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

வடமராட்சியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில்.16-04-2021. இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.என தெரிவிக்கப்படுகிறது. நிலாவரை.கொம்...

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

நாட்டில் கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள்

  கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்களை காவல் துறை  தலைமையகம் தனது இணையத் தளத்தில் பகிரங்கபப்டுத்தியுள்ளது. www.ineed.police.lk எனும் இணையத் தள முகவரியில் சென்று அந்த விபரங்களை பார்வை இட முடியும் என காவல் துறை  தலைமையகம்.13-04-2021. இன்று அறிவித்தது.;இவ்வாறான நிலையில், ஒருவர் பயன்படுத்திய தொலைபேசியையோ அல்லது புதிதாக ஒரு தொலைபேசியையோ கொள்வனவு செய்யும் போது, முதலில் தான் கொள்வனவு செய்ய உள்ள தொலைபேசியின் EMI இலக்கத்தைப்...

சனி, 3 ஏப்ரல், 2021

புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் தர்மபுரத்தில் இருவர் கைது!!

இந்த நிலையில் புதையல் தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து 02-04-2021.அன்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்ப உபகரணங்களும் மீட்கப்பட்டு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.கைதான சந்தேக நபர்களில் வவுனியா பகுதியை சேர்நதவர் எனவும், மற்றவர் அம்பாறை பொத்துவில் பகுதியை...

புதன், 31 மார்ச், 2021

யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுவரித் திணைக்களத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், 30-03-2021.அன்று மாலை முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து...

புதன், 24 மார்ச், 2021

நாட்டில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதியில்லை

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ் 24-03-2021.இன்று தெரிவித்தார்.மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11,13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி நேற்று (23) கிடைத்திருப்பதாகவும் அமைச்சர்...

திங்கள், 22 மார்ச், 2021

பெல்மடுல்லவில் 80 இலட்சம் ரூபா பணத்துடன் பெண் பொலிஸாரால் கைது

பெல்மடுல்ல பகுதியில் சுமார் 80 இலட்சம் பணத்தை கொண்டு சென்ற பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் அதிகளவு பணத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேகநபர் ஓபநாயக்க பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பணம் எப்படி வந்தது, காரணம் என்ன என்பதை குறித்த பெண் வெளியிடவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இவர்...

வியாழன், 18 மார்ச், 2021

நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு விலையை அதிகரிக்க தேவை இல்லை

நாட்டில்  சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என  சிறிலங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ                                 தெரிவித்துள்ளார்.                                       அலரி...

புதன், 10 மார்ச், 2021

ஓர் மகிழ்ச்சி தரும் செய்தி..யாழ் விவசாயிகளுக்கு

யாழ் மாவட்டத்தில் தற்பொழுது உருளைக்கிழங்கு அறுவடைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து, உருளைக் கிழங்குகளை கொள்வனவு செய்யுமாறு, பிரமர் மஹிந்த ராஜபக்ஷ லங்கா சதோச நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இதேவேளை யாழ்ப்பாண உருளைக்கிழங்குகளுக்கு தென்னிலங்கை மக்களிடம் சிறந்த வரவேற்பு இருப்பதாகவும் ஏனைய உருளைக்கிழங்குகளைவிட, யாழ்ப்பாண உருளைக்கிழங்கின் வாசமும் சுவையும் அலாதியானது என்றும் அரசின் பிரதானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்....

சனி, 27 பிப்ரவரி, 2021

பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் பாதுகாப்பான முகக் கவசத்தை தயாரித்து அசத்தல்

உலகளாவிய ரீதியில் மிகவும் பாதுகாப்பான கோவிட் முகக் கவசம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பேராதனை பல்கலைகழக நிபுணர்களினால் கோவிட் வைரஸ் தொற்றை அழிக்கும் விசேட முகக் கவசம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை,26-02-2021 அன்று  இடம்பெற்றுள்ளது.இதுவரையில் உலகில் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களை விடவும் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில்...