நாட்டில் பண்டையகால தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தம்வசம் வைத்திருந்த இளைஞனை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய 12-11-2021. வெள்ளிக்கிழமை அன்று மாலை அக்கரைப்பற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பகீரதன் தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாண்டியடிப் பகுதியை சேர்ந்தவர் எனவும் 19 வயது மதிக்கத்தக்க இச்சந்தேக நபரிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் அடங்கிய பொருட்கள் பல
மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக