சிறிலங்கா காவல் துறை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ராஜகிரிய பிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தர்மபுரம் காவல் துறை உத்தியோகத்தர்கள் குழுவை சந்தேகநபர்கள்
தாக்கியுள்ளனர்.
இதில் காவல் துறை அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய காவல் துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாககாவல் துறையினர்
தெரிவித்தனர்.
இதற்கமைவாக, ராஜகிரியவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (26) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக