மேல் மாகாணத்திற்கு வெளியே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருமண வைபவங்களை நடத்த முடியும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித்
ரோஹண குறிப்பிட்டார்.
வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படும் என்றும்
குறிப்பிட்டார்.
ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களில் திருமண வைபவங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை
என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் நட்சத்திர
ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்டதாக கூறப்படும் திருமண வைபவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைவாக ஹோட்டல் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக