வெள்ளி, 4 அக்டோபர், 2024

நாட்டில் பல வாகனகள் மாயம்: விசாரணைகளுக்கு ஒருமாதம் கால அவகாசம்

நாட்டில் ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விரிவான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பிடிக்கும் என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள்
 தெரிவிக்கின்றன.
 ஒவ்வொரு நிறுவனம் தொடர்பான அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு, பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்படும்.

 தேசிய கணக்காய்வு அலுவலகம் கடந்த வாரம் இந்த விசாரணைகளை ஆரம்பித்தது. 
தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால், விசாரணை நடத்தும் தணிக்கை அதிகாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு 
உள்ளாகியுள்ளனர்.
 மேலும், தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமில்லாத வாகனங்களை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் மற்றும் முறையான
 நடைமுறையின்றி வாகனங்களை
 ஏற்றுக்கொண்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 27 செப்டம்பர், 2024

பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்

 இலங்கையில்கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என
 கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன
 தெரிவித்தார்.
 புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, 
முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.
 இந்தப் பின்னணியில், சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 17 செப்டம்பர், 2024

நாட்டில் புலிகளுடன் தொடர்புப்பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வேன் - ரணில் உறுதி

நாட்டில் புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை 
மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை 
முன்னெடுக்க உள்ளதாகவும், இவையெல்லாம் செயற்படுத்த 21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  
மன்னார் நகரப் பகுதியில் இன்றைய தினம் (17.09) மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன்.மன்னாரில் பாரிய வளமுள்ளது. அதில் ஒன்று சூரிய சக்தி. 
அதை நாம் முழுமையாக பயண்படுத்துவோம்..மன்னாரை சூரிய சக்தியின் மத்திய நிலையமாக மாற்றுவோம்' 'மன்னார் கடலில் இருந்து நல்ல காற்று வீசுகிறது. அதையும் பயண்படுத்துவோம் .
 அந்த சக்தி இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது.'இங்கு வாழும் தமிழ்,சிங்கள முஸ்லிம் மக்கள் நன்கு வாழ வழி செய்வோம். மன்னாரில் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதுவித அச்சமுமின்றி 
வாழ முடியும் .சிங்கள கிராமங்களில் 5 பன்சலைகள் உள்ளன. அவற்றையும் நாம் பொறுப்பேற்போம். '
புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம். மன்னாரை மேம்படுத்தி மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம். கமத் தொழிலை ஊக்குவிப்போம்.
இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும். 21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம்” எனத் தெரிவித்துள்ளார். 
குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் ராஜாங்க 
அமைச்சர்களான காதர் மஸ்தான்,சுரேன் ராகவன்,பாராளுமன்ற உறுப்பினர்களான கே.திலீபன், முஷராப்,முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து 
கொண்டதோடு சுமார் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 13 அக்டோபர், 2023

உங்கள் அனைவரிடமும் முக்கியமாக இருக்க வேண்டிய நாட்டின் தொலைபேசி இலக்கங்கள்

நாட்டு மக்கள் அனைவரிடமும் முக்கியமாக  இருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்
● பிரதமர் – 011-2321406

● அவசர பொலிஸ் பிரிவு – 119, 011-5717171

● அம்புலன்ஸ் (கொழும்பு) – 110

● பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938

● அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919

● நீர் வடிகாலமைப்புச் சபை – 1939

● போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984

● குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962

● கல்வி அமைச்சு – 1988

● விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905

● IMEI மீளாய்வு அலகு – 1909

● விவசாயிகளுக்கான சேவைகள் – 1918

● மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996

● வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் – 1989
● தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984

● நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977

● மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956

● உளநலம் சார் பிரச்சினைகள் – 021 222 6666

● சட்ட உதவி ஆணைக்குழு – 021 222 4545

● சிறுவர் துஸ்பிரயோகம் – 1929

● பரீட்சை திணைக்களம் – 1911

● உயர்கல்வி அமைச்சு – 1918

● தேசிய உதவி மையம் – 118

● போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111

● குருதி வங்கி – 011-2695728, 011-2692317, 011-2674799

● செஞ்சிலுவை – 011-2672727

● தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் – 011-2422222, 110

● இராணுவ தலைமையகம் – 011-2432682

● வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு – 011-2691500, 011-2437515, 011-2330646

● குற்றப்பிரிவு – 011-2691500

● பொலிஸ் தலைமையகம் – 011-2421111

● மின்சார தடை – 011-2466660, 011-4617575

● அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் – 011-2421052

● தொலைபேசி இணைப்பு – 112

● தேசிய அவசர பிரிவு – 011-2691095, 011-2699935

● விபத்து பிரிவு – 011-2693184

● சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை – 011-2437744

● மோசடி பணியகம் – 0112583512

● சட்ட உதவி ஆணைக்குழு – 0112433618

● கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் – 011-2691111

● செஞ்சிலுவை அம்புலன்ஸ் – 011-5555505

● மத்திய பேருந்து நிலையம் – புறக்கோட்டை – 011-2329606

● இலங்கை மின்சக்தி நிறுவனம் – 1910

● விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் – 1920

● அவசர அதிவேக பிரிவு – 1969

● இலங்கை மின்சார சபை – 1987

● தேசிய வைத்தியசாலை – 1959

● தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு – 1966

● வீதி அபிவிருத்தி அதிகாரசபை – 1968

● தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் – 1900

● புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) – 011-2842052

● கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு – 011-2434215


வெள்ளி, 29 செப்டம்பர், 2023

முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது

யாழில் நவற்கிரி புத்தூரை சேந்தவரின்  முச்சக்கரவண்டி 
 28-09-2023.வியாழக்கிழமை  அன்று  மரத்தின் கீழ் நிழலுக்காக  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததனால் முச்சக்கரவண்டியின் கூடாரம் முற்ராக சேதம் ஆனது  என அறிவிக்கப்பட்டுள்ளது.
 அதேவேளை, முச்சக்கரவண்டி உரிமையாளரான சாரதிக்கு  முகத்திலும் நென்சிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது   என முச்சக்கரவண்டிஉரிமையாளர் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 7 செப்டம்பர், 2023

போதனா வைத்தியசாலையில் பறிபோன சிறுமியின் கை தாதி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி

யாழ் போதனா வைத்தியசாலையில்  8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்ட தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண 
தடை விதித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் 
அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் கை பாதிப்புக்கு 
உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் , அகற்றப்பட்டது.
தாதிக்கு பயணத்தடை
அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்திய சாலை, வடமாகாண ஆளூநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுமியின் , பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தினர்.
அதனை தொடர்ந்து வியாழக்கிழமை (07) யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நிலையில், பெற்றோர் சார்பில் குறித்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட மன்று தாதியருக்கு பயணத் தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 27 பிப்ரவரி, 2023

வடக்கில் தென்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வெளியான அதிர்ச்சி செய்தி

 

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.இது 
தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் கோரிக்கை கடிதம் வடக்கு மாகாணத்திலிருந்து அனுப்பப்படவுள்ளது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாணத்திலிருந்து அதிகளவானோர் தெரிவு செய்யப்பட்டிருக்கவேண்டிய நிலையில், அப்போதைய ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீட்டால் குறைந்தளவானோரே தெரிவாகியிருந்தனர்.
இவர்களில் 100 பேர் வரையில் தற்போது வடக்கு மாகாணசபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், வடக்கு மாகாண சபையில் சிற்றூழியர், தகைசார் பணியாளர் உட்பட சுமார் ஆயிரத்து 200 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இந்த வெற்றிடங்களுக்கு, ஏனைய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்து ஆயிரத்து 100 பேரை நியமிக்குமாறு வடக்கு மாகாணசபையால் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றியுள்ள நிலையில், தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை இங்கு நியமிக்க முயற்சிக்கப்படுகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

இலங்கை மருதானையில் கண்ணீர்ப்புகை தாக்குதல்

மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகச் செய்தியாளர் 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 21 நவம்பர், 2022

நாட்டில் பேருந்து பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு தானியங்கி முறையை அறிமுகப்படுத்த முடிவு

பேருந்து பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன 
தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பயணிகள் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தும் வகையில் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்கப்படும் என்பதால் அவற்றின் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என்றும் பயணிகள்  உள்ளே வரும் இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய சாதனங்களில் தங்களது வங்கி அட்டைகளை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இடங்களை அறிய, பேருந்துகளில் ஜிபிஎஸ் அமைப்பை அணுகும் திறன் கொண்ட புதிய மின்னணு சாதனங்களை பொருத்தவும்
 திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பேருந்து உரிமையாளரின் அனுமதியுடன், சாரதிக்கு உதவியாக ஒரு உதவியாளரை பணியமர்த்த முடியும் என்றும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சாதனங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு, இலங்கை மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.
புதிய கொடுப்பனவு முறைமை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 11 அக்டோபர், 2022

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் தாயொருவர் எனது மகன் எனக்கு வேண்டாம் என கடிதம் எழுதி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை
 என கூறி ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து 
விட்டு சென்றுள்ளார்.
அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன்அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில்
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 24 செப்டம்பர், 2022

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

இலங்கையின்  பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் முறையான உணவு வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை உண்மையாகும்.எனினும் விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சில சம்பவங்களை மாத்திரம் கொண்டு அவற்றை திரிபுபடுத்தி வேறு வகையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எமது காலத்திலும் பாடசாலைகளில் காலைக்கூட்டம் இடம்பெறும் போது, மாணவர்கள் மயங்கி விழுவது வழமையானதொரு விடயமாகும். இது பாடசாலைக்கு சென்ற அனைவரும் அறிந்த பொதுவானதொரு
 விடயமாகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 30 ஜூன், 2022

இலங்கை மக்களின் துணிகர செயல் அந்தரத்தில் தொங்கும் ஆட்டோ

இலங்கை ராஜிகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் வாகன பாகங்களை திருடியவர்களை கையுமெய்யுமாகப் பிடித்த பிரதேச மக்கள், திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட முச்சக்கர வண்டியை மின்கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 
இடம்பெற்றுள்ளது.
மக்களின் வாகனப் பாகங்கள் மற்றும் எரிபொருளைத் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட குறித்த முச்சக்கர வண்டியே, மக்களால் பறிமுதல் செய்யப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது.
நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சுற்றி திருட்டு வழக்குகள் கணிசமாக 
அதிகரித்துள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 22 மே, 2022

யாழில் ஆசிரியரின் மோசமான செயலால் மாணவனுக்கு நேர்ந்த கதி

 யாழில் ஆசிரியர் அறைந்ததால் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு செயற்பட்டுள்ளார். மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




வியாழன், 28 ஏப்ரல், 2022

நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு

நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் 60,000 தொடக்கம் 80,000 வரை விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயுவை, 30ஆயிரமாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முழுமையான சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதாயின் மாதாந்தம் 30 மில்லியன் டொலர் தேவை என்றும் தற்போதைய நிலையின் கீழ், இதற்காக செலவு செய்ய முடியாதிருப்பதுடன் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் 
என கூறியுள்ளார்.
எனவே விறகு உள்ளிட்ட ஏனைய எரிபொருளை பயன்படுத்தக் கூடிய சகலரும் மீண்டும் பழைய முறைக்கே செல்வது அவசியம் என்றும் இதுவே நாட்டுக்காக செய்ய கூடிய பெரிய அர்ப்பணிப்பு என்றும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்

யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில் இளவாலைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதடையடுத்து கணவனை குழந்தையோடு நீதிமன்றில் முற்படுமாறு கோரியதற்கிணங்க பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான கணவரிடம் குழந்தை 5 மாத பாலூட்டும் குழந்தை 
என்பதற்கிணங்க
 தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இடைக்கால கட்டளை வழங்கிய நிலையில் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவர் குழந்தையோடு நேற்றைய தினம் தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதோடு தாயார் குழந்தையை பல இடங்களிலும் தேடி அலைகின்றார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 16 பிப்ரவரி, 2022

இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த பொதிகளில் ஆபத்தான பொருட்கள்

ஐரோப்பிய நாடுகள் இருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம
 தெரிவித்துள்ளது.
மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொதிகள் பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளன. தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு போலியான முகவரியிட்டு பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஷ் எனப்படும் கஞ்சா 472 கிராமும் 302 போதை வில்லைகளும் சிக்கியுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களாக போதைப்பொருளை அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

புதன், 9 பிப்ரவரி, 2022

பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் சந்தேக நபர் கைது

அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பிரதான சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி மீது , சம்பவ தினத்தன்று சந்தேக நபர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து அம்புலன்ஸ் சாரதியை சுட முயற்சித்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதற்கமைய, இதுவரை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

நாட்டின் கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டு ஒன்பது பேர்

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் 
தெரிவித்துள்ளனர்.
இன்று இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கொழும்பு கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.கே.டபிள்யூ
.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் காவல்துறை குழுவினர் கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 25 ஜனவரி, 2022

யாழ் மக்கள் கடும் பீதியில் பொலிசாரினால் கைப்பற்றபட்ட ஆபத்தான பொருட்கள்

யாழில் மறைந்துவைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்தான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மானிப்பாய் வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்தே இவ்வாறு வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸாரினால் அவை மீட்கப்பட்டுள்ளது. எனினும் இவற்ருடன் தொடர்புடைய கும்பல் இன்னும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 இதனால் யாழ் மக்கள் ஒரு
வித அச்சத்துடன் காணப்படுகின்றனர்.இதன்போது 2 கஜேந்திர கோடரிகள், நீளமான வாள் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளபோதும், சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, 26 நவம்பர், 2021

இலங்கைக் காவல் துறையை தாக்கிய ஆறு பேர் சிக்கினர்

சிறிலங்கா  காவல் துறை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ராஜகிரிய பிரதேசத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தர்மபுரம் காவல் துறை உத்தியோகத்தர்கள் குழுவை சந்தேகநபர்கள்
 தாக்கியுள்ளனர்.
இதில் காவல் துறை  அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய காவல் துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாககாவல் துறையினர் 
தெரிவித்தனர்.
இதற்கமைவாக, ராஜகிரியவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (26) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>