
உலகளாவிய ரீதியில் மிகவும் பாதுகாப்பான கோவிட் முகக் கவசம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பேராதனை பல்கலைகழக நிபுணர்களினால் கோவிட் வைரஸ் தொற்றை அழிக்கும் விசேட முகக் கவசம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை,26-02-2021 அன்று இடம்பெற்றுள்ளது.இதுவரையில் உலகில் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களை விடவும் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில்...