சனி, 31 அக்டோபர், 2020

நாட்டில் திருமண வைபவங்களை நடத்தலாமா பிரதி பொலிஸ்மா அதிபர் விளக்கம்

மேல் மாகாணத்திற்கு வெளியே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருமண வைபவங்களை நடத்த முடியும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களில் திருமண வைபவங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, தனிமைப்படுத்தல்...

வெள்ளி, 30 அக்டோபர், 2020

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் பூந்தோட்டம் பிரதான வீதியில் பெண்ணொருவர் காயம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததுடன், அதில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பாக வவுனியா...

வியாழன், 29 அக்டோபர், 2020

அமைதிப் பூங்காவான தலைநகர் முடக்கப்படும் அபாயத்தில் இலங்கை

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகின்ற நிலையில் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்கள் முடக்க நிலையில் உள்ளன.நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 9000ஐ கடந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஐ அண்மித்துள்ளது.இலங்கையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில்...

புதன், 28 அக்டோபர், 2020

கரடியன்குளம் பிரதேத்தில் காணி அளவிடும் பணி நிறுத்தப்பட்டது

மட்டக்களப்பு – கரடியன்குளம் பிரதேத்தில் மக்கள் குடியிருப்புக்கள், விவசாய காணிகளை உள்ளடக்கிய காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.கரடியன்குளம் பிரதேசத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலாகாலமாக அப்பிரதேசத்தில் விவசாயம் மற்றும் குடியிருப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அக் காணிகளுக்கான உறுதிப்பத்திரம்,...

செவ்வாய், 27 அக்டோபர், 2020

குறண பிரதேசத்தில் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு – குறண பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 1 கிலோ 60 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் நீர்கொழும்பு பிராந்திய குற்ற புலனாய்வுப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கெப்பட்டிபொல மாவத்தை, மேஜர் ராஜ மைதானத்திற்கு அருகில் வைத்து கேடிஎச் வான் ஒன்றில் பயணம் செய்தபோதே குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கடந்தவாரம் குறண கெப்பட்டிபொல பிரதேசத்தில் அதிசொகுசு வீடொன்றில் ஹெராேயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள்...