ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்

யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில் இளவாலைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதடையடுத்து கணவனை குழந்தையோடு நீதிமன்றில் முற்படுமாறு கோரியதற்கிணங்க பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான கணவரிடம் குழந்தை 5 மாத பாலூட்டும் குழந்தை 
என்பதற்கிணங்க
 தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இடைக்கால கட்டளை வழங்கிய நிலையில் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவர் குழந்தையோடு நேற்றைய தினம் தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதோடு தாயார் குழந்தையை பல இடங்களிலும் தேடி அலைகின்றார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 16 பிப்ரவரி, 2022

இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த பொதிகளில் ஆபத்தான பொருட்கள்

ஐரோப்பிய நாடுகள் இருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம
 தெரிவித்துள்ளது.
மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொதிகள் பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளன. தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு போலியான முகவரியிட்டு பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஷ் எனப்படும் கஞ்சா 472 கிராமும் 302 போதை வில்லைகளும் சிக்கியுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்களாக போதைப்பொருளை அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

புதன், 9 பிப்ரவரி, 2022

பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் சந்தேக நபர் கைது

அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பிரதான சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி மீது , சம்பவ தினத்தன்று சந்தேக நபர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து அம்புலன்ஸ் சாரதியை சுட முயற்சித்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதற்கமைய, இதுவரை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

நாட்டின் கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டு ஒன்பது பேர்

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் 
தெரிவித்துள்ளனர்.
இன்று இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கொழும்பு கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.கே.டபிள்யூ
.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் காவல்துறை குழுவினர் கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>