திங்கள், 21 நவம்பர், 2022

நாட்டில் பேருந்து பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு தானியங்கி முறையை அறிமுகப்படுத்த முடிவு

பேருந்து பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இதற்கமைய, பயணிகள் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் பேருந்து கட்டணத்தை செலுத்தும் வகையில் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்கப்படும்...

செவ்வாய், 11 அக்டோபர், 2022

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் தாயொருவர் எனது மகன் எனக்கு வேண்டாம் என கடிதம் எழுதி பொலிஸாரிடம் ஒப்படைப்பு

எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும்...

சனி, 24 செப்டம்பர், 2022

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

இலங்கையின்  பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் முறையான உணவு வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை உண்மையாகும்.எனினும் விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,சில...

வியாழன், 30 ஜூன், 2022

இலங்கை மக்களின் துணிகர செயல் அந்தரத்தில் தொங்கும் ஆட்டோ

இலங்கை ராஜிகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் வாகன பாகங்களை திருடியவர்களை கையுமெய்யுமாகப் பிடித்த பிரதேச மக்கள், திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட முச்சக்கர வண்டியை மின்கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.மக்களின் வாகனப் பாகங்கள் மற்றும் எரிபொருளைத் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட குறித்த முச்சக்கர வண்டியே, மக்களால் பறிமுதல் செய்யப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது.நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து எரிபொருள்...

ஞாயிறு, 22 மே, 2022

யாழில் ஆசிரியரின் மோசமான செயலால் மாணவனுக்கு நேர்ந்த கதி

 யாழில் ஆசிரியர் அறைந்ததால் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு செயற்பட்டுள்ளார். மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

வியாழன், 28 ஏப்ரல், 2022

நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு

நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அன்றாடம் 60,000 தொடக்கம் 80,000 வரை விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயுவை, 30ஆயிரமாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாட்டின் முழுமையான சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதாயின் மாதாந்தம் 30 மில்லியன் டொலர் தேவை என்றும் தற்போதைய...

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவன்

யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத் தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.கணவன்,மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில் இளவாலைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து பொலிஸார் மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.இதடையடுத்து கணவனை குழந்தையோடு நீதிமன்றில் முற்படுமாறு கோரியதற்கிணங்க பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான கணவரிடம் குழந்தை...

புதன், 16 பிப்ரவரி, 2022

இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த பொதிகளில் ஆபத்தான பொருட்கள்

ஐரோப்பிய நாடுகள் இருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம தெரிவித்துள்ளது.மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்தப் பொதிகள் பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளன. தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு...

புதன், 9 பிப்ரவரி, 2022

பாணந்துறையில் அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் சந்தேக நபர் கைது

அம்புலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பிரதான சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பாணந்துறை குருப்புமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி மீது , சம்பவ தினத்தன்று சந்தேக நபர் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து அம்புலன்ஸ் சாரதியை சுட முயற்சித்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.அதற்கமைய,...

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

நாட்டின் கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டு ஒன்பது பேர்

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இன்று இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கொழும்பு கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல்...

செவ்வாய், 25 ஜனவரி, 2022

யாழ் மக்கள் கடும் பீதியில் பொலிசாரினால் கைப்பற்றபட்ட ஆபத்தான பொருட்கள்

யாழில் மறைந்துவைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்தான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மானிப்பாய் வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்தே இவ்வாறு வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 09.30 மணியளவில் மானிப்பாய் பொலிஸாரினால் அவை மீட்கப்பட்டுள்ளது. எனினும் இவற்ருடன் தொடர்புடைய கும்பல் இன்னும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்...