வியாழன், 29 ஏப்ரல், 2021

நாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மே 9 வரை பூட்டு

நாட்டில் எட்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளும் தற்போதைய கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நேரடிக் கற்றல் செயல்பாடுகள் நிறுத்தப்படுகின்றன என கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்கா ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் அதிபர்களுக்கு 
அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நேரடிக் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில் தற்போதைய கொவிட் பரவலைக் கருத்தில் கொண்டு கலாசாலை செயல்பாடுகளை இடைநிறுத்தத்
 தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும் இணைய வழியில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 26 ஏப்ரல், 2021

யாழ் உரும்பிராய் விபத்தில் 15 சிறிலங்கா இராணுவத்தினர் காயம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில்.26-04-2021. இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில்  சிறிலங்கா  இராணுவத்தினர் 
காயமடைந்துள்ளனர் 
 கைதடி - மானிப்பாய் வீதி ஊடாக ; மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் யாழ்ப்பாணம் - பலாலி வீதி வழியாக  இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர்  ரக வாகனமும் உரும்பிராய் சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 
 குறித்த விபத்தில் டிப்பர் வாகனம் குடை சாய்ந்தது, இராணுவத்தினரின் வாகனமும் கடும் சேதத்திற்குள்ளானது. 
 காயமடைந்த இராணுவத்தினர் 15 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
 மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் கோப்பாய் காவல் துறையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>






சனி, 24 ஏப்ரல், 2021

புன்னாலைக்கட்டுவனி கொள்ளைக் கும்பலின் பிரதான சூத்திரதாரி அதிரடியாகக் கைது.

யாழில் நள்ளிரவு வேளையில் வயோதிபர் வசிக்கும் வீடுகளில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரிடமிருந்து 18 தங்கப்பவுண் நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன
 கைப்பற்றப்பட்டன.
அத்துடன் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கி விற்றமை மற்றும் அடகு பிடித்தமை போன்ற குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பூசகர்
 ஒருவரின் வீட்டுக்குள்
 சமையல் அறை புகைக் கூண்டு ஊடாக நுழைந்த கொள்ளையர்கள் வாள்களைக் காண்பித்து மிரட்டி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்தனர்.அந்தக் கொள்ளை உட்பட கந்தரோடை,
 நல்லூர், கந்தர்மடம் என நான்கு இடங்களில் முதியவர்களை மிரட்டி கொள்ளையிட்ட கும்பலின் பிரதான சந்தேக நபரே கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 17 ஏப்ரல், 2021

கோப் குழு அதிருப்தி சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் குறித்து

நாட்டில் சுகாதார அமைச்சினால், 2006 ஆம் ஆண்டு 31.71 மில்லியன் ரூபா செலவில், கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் 224 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும், 15 வருடங்களுக்கு மேலாக அவை செயலற்ற நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
 அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவான கோப் குழுவில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், கோபா குழு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 இதேநேரம், சுகாதாரத்துறை அபிவிருத்தி விரிவாக்கத் திட்டத்தின்கீழ், ஐந்து வருடங்களில் புத்தாக்கத் திட்டங்களை ஊக்குவிக்க, 346 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.  2017ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 34 புத்தாக்க ஆய்வுத் திட்டங்களுக்காக, 399 மில்லியன் ரூபாவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்தும், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது. தனிநபர் ஒருவர் மேற்கொண்ட ஆராய்ச்சி, திட்டங்களின் பயனற்ற தன்மைக்கு வழிவகுத்தன என்பதும் இதன்போது தெரியவந்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது.
 இதேநேரம், களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு, 7 மாடிகளைக் கொண்ட மிலேனியம் சிகிச்சையறை தொகுதியை அமைப்பதற்கு, 398 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம், கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு
 வழங்கப்பட்டுள்ளது.
 இந்தக் கட்டடத் தொகுதியின் பணிகள், 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி பூரணப்படுத்தப்பட்டிருக்க வேண்டியபோதிலும், 2014 மார்ச் 06 ஆம் திகதி வரையில், அந்தப் பணிகள் பூர்த்திசெய்யப்படாது ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையும் கோபா குழுவில் புலப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அதுவரையான காலப்பகுதியில், குறித்த ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்ட, 51 மில்லியன் ரூபாவை மீளப்பெற முடியாமல் போனமை குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு விசேட கவனம் செலுத்தியது. இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அந்தக் குழு பணிப்புரை வழங்கியதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 16 ஏப்ரல், 2021

வடமராட்சியில் அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

வடமராட்சியில் சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில்.16-04-2021. இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.என 
தெரிவிக்கப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 13 ஏப்ரல், 2021

நாட்டில் கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள்

 கொள்ளையடிக்கப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்களை காவல் துறை  தலைமையகம் தனது இணையத் தளத்தில் பகிரங்கபப்டுத்தியுள்ளது.
 www.ineed.police.lk எனும் இணையத் தள முகவரியில் சென்று அந்த விபரங்களை பார்வை இட முடியும் என காவல் துறை  தலைமையகம்.13-04-2021.
 இன்று அறிவித்தது.
;இவ்வாறான நிலையில், ஒருவர் பயன்படுத்திய தொலைபேசியையோ அல்லது புதிதாக ஒரு தொலைபேசியையோ கொள்வனவு செய்யும் போது, முதலில் தான் கொள்வனவு செய்ய உள்ள தொலைபேசியின் EMI இலக்கத்தைப் பெற்று, ; காவல் துறை ; இணையத் தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ; திருட்டு போன தொலைபேசிகளின் EMI இலக்கங்களுடன் ஒப்பீடு செய்து  தகவல்களை உறுதி செய்துகொள்ளுமாறு காவல் துறையை  பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
அவ்வாறு ஒப்பீடு செய்வதன் ஊடாக தான் கொள்வனவு செய்யும் தொலைபேசி சிக்கலுக்கு உரியதல்ல என்பதை ; ஒருவர் உறுதி செய்துகொள்ள கூடியதாக இருக்கும் என காவல் துறையினர் 
கூறுகின்றனர்.
 திருடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள ; நிலையிலேயே, காவல் துறையினர் வீண் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு பொது மக்களிடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

 

சனி, 3 ஏப்ரல், 2021

புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் தர்மபுரத்தில் இருவர் கைது!!

இந்த நிலையில் புதையல் தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து
 02-04-2021.அன்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்ப உபகரணங்களும் மீட்கப்பட்டு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கைதான சந்தேக நபர்களில் வவுனியா பகுதியை சேர்நதவர் எனவும், மற்றவர் அம்பாறை பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். இதேவேளை மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் 
முன்னெடுத்த வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>