வெள்ளி, 27 செப்டம்பர், 2024

பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் மாயம்

 இலங்கையில்கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில்,...

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

நாட்டில் புலிகளுடன் தொடர்புப்பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வேன் - ரணில் உறுதி

நாட்டில் புலிகளுடன் தொடர்பு பட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், இவையெல்லாம் செயற்படுத்த 21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  மன்னார் நகரப் பகுதியில் இன்றைய தினம் (17.09) மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...