
பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல, அந்த விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார்.பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்காது. இது எமது நாட்டில் மட்டுமல்ல உலக சந்தையிலும் இதே நிலைதான் உள்ளது. சீனிக்கான வரியை அரசாங்கம் குறைத்துள்ளது. பால்மாவுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது....